முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களஆய்வு நடத்தி வருகிறார். அத்துடன் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார். அதன்படி வரும் 9, 10ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு நடத்துகிறார்.
இந்த தகவலை திருவாரூரில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு நிருபர்களிடம் கூறினார்.