Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வி.பி.சிவகொழுந்துவின் சகோதரரான வி.பி.ராமலிங்கம்,  2019-ல் இருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பணியாற்றிய இவர் 2021-ம் ஆண்டு மே 11-ம் தேதி நியமன சட்டமன்ற உறுப்பினாக தேர்வு செய்யப்பட்டார்.

மனு தாக்கலின் போது மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் சாய்.சரவண குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான் குமார், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யாததால் வி.பி.ராமலிங்கம் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார். நாளை முறைப்படி அறிவிப்பு வெளியாகிறது.

இந்த நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தற்போதைய பாஜக தலைவர் செல்வ கணபதி ‌மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனித்தனியாக மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

error: Content is protected !!