Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.09 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 9.43 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.17டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து காலை 11.22 மணியவில் ரிக்டர் 4.6 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மதியம் 12.06 மணியளவில் ரிக்டர் 4.7 மணியளவில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்தமான் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அந்தமானில், கடந்த 25ம் தேதி  24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!