Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வக்கீல்கள் மீது ED வழக்குப்பதிவு செய்வதை தடுக்க உச்சநீதிமன்றம் முடிவு

சட்ட ஆலோசனை வழங்கிய வழக்கறிஞர்கள் மீது முறைகேடாக வழக்குப்பதிவு செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு மனுதாரர்கள் தரப்பில் அமலாக்கத்துறை மற்றும் காவல்துறையின் முறைகேடான வழக்குப் பதிவை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து என்னென்ன வழி காட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. அதனை ஒன்றிய அரசு தரப்பிற்கு 3 நாட்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

error: Content is protected !!