Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெ காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு,விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு நந்தி பகவான் வெள்ளி கவச

அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதை தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப்பூ நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!