Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி உள்பட 60 இடங்களில் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு

தேசிய புலனாய்வு அதிகாரிகள் தமிழகம் , கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில்60-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில்  திருச்சி, மயிலாடுதுறை, சென்னை, நெல்லை, தென்காசி, திருப்பூர் , கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை நிறைவு பெற்றதை அடுத்து தற்போது என்ஐஏ தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில்,கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு ஆகியவை தொடர்பாக தான் இந்த 3 மாநில சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், பல்வேறு மின்னணு சாதனங்கள், 4 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்ற பட்டதாகவும் தகவல்கள்தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!