Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாதாள சாக்கடை பணியில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் பலி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி (30), பிரபு (32) ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!