தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்வசிவம் மகன் வினோத்குமார் (38). ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா(35). இவர்களுக்கு 6ம் வகுப்பு படிக்கும் ஓவியா (12) 3ம் வகுப்பு படிக்கும் கீர்த்தி,8, என்ற மகள்களும், ஈஸ்வரன்,5, என்ற மகனும் இருந்தனர்.
இந்நிலையில், நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன், சமூக வலைதள மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து, தனது காதலருடன் சென்று விட்டார். இதனால், மதுபோதைக்கு அடிமையான வினோத்குமார், குழந்தைகளை \
வெறுத்து அவர்களை அடிக்கடி திட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த வினோத் குமார், தனது ஓவியா, கீர்த்தி ஆகியோரை வீட்டில் இருந்து வெளியே விளையாடாவும், தண்ணீர் எடுத்து வரவும் கூறியுள்ளார்.
பிறகு, ஈஸ்வரனை கொஞ்சுவது போல, துாக்கி வைத்து, அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து, 2 மகளையும் அடுத்தடுத்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன்பிறகு, மதுக்கூர் போலீஸ் ஸ்டேஷனில் சரண்டராகினார். இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., ரவிசந்திரன் மற்றும் மதுக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.