கோவைமாவட்டம் ஆனைமலை தாலுக்கா கடந்த 2018 ஆம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய நீதிமன்றம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர் இந்நிலையில் ஆனைமலை வருவாய்த்துறையினர் வட்டாட்சியர் திரிபுரசுந்தரி கோவை மாவட்ட நீதிபதி சுஜிதாவிடம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்க நான்கு கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை மண் தானம் வழங்கி அதற்கு உண்டான ஆவணத்தை ஒப்படைத்தார் தற்போது இந்த நான்கு ஏக்கர் இடத்தின் மதிப்பு ரூபாய் 4 கோடி எனவும் நான்கு ஏக்கர் பரப்பளவில் புதிய நீதிமன்றம் வளாகம் அமைக்கப்பட உள்ளது என தெரிவித்தனர் இதனால் இப்பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்கள் வழக்குகள் காவல் நிலையங்களில் பதியப்பட்டு வழக்குகளை விரைவாக முடிக்க இதற்கு நல்லதொரு தீர்ப்பு கிடைக்க இந்த நீதிமன்றம் அமைய உள்ளது வரவேற்பு தக்கது என தெரிவித்தனர்.

