Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை குப்பை கிடங்கில் தீ- 2வது நாளாக புகை மண்டலம்

மதுரை குப்பை கிடங்கில் தீ- 2வது நாளாக புகை மண்டலம்

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் நேற்று மதியம் ஏற்பட்ட தீ விபத்து, இரண்டாம் நாளாக தொடர்ந்து எரிந்து வருகிறது. தீயை அணைக்க மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, வீரர்கள் போராடி வருகின்றனர். குப்பைகள் டன் கணக்கில் எரிவதாலும், காற்றின் வேகத்தாலும் தீயைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. தீயணைப்பு வாகனங்கள் மட்டுமின்றி, குடிநீர் லாரிகள் மூலமும் நீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீயினால் அவனியாபுரம், சிந்தாமணி, சாமநத்தம், விமான நிலையம் செல்லும் பகுதிகளில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

error: Content is protected !!