Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கூத்தைபார் மகாகாளிஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் மகாகாளிஸ்வரி ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள சிவா ஆலயங்களில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் உள்ள மகா

காளீஸ்வரி கோவிலில் உலகின் மிக பெரிய 61 அடி உயரம் கொண்ட நாகநாத மகாலிங்கம் உள்ளது.

இந்த லிங்கத்திற்கு சனி பிரதோஷத்தை விழா மற்றும் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜையில் நாகநாத மகாலிங்கத்திற்கும் பெரிய நந்திக்கும் சந்தனம் மஞ்சள் திருநீர் மூலிகை பொடி இளநீர் பால் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில் கூத்தைபார் கிராமத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!