கரூர் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.
கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் அமைத்தல், அரிக்காரம் பாளையத்தில் சமுதாயக்கூடம் கட்டும் பணி, பெரிய குளத்து பாளையம் பகுதியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் பணி, நெரூர் நீரேற்று நிலையத்திலிருந்து பாலம்மாள்புரம் சம்ப் மோட்டார்

பொருத்துதல் மற்றும் சோதனை செய்து பம்புசெட் நீக்குதல் மற்றும் சோதனை செய்யும் பணி உள்ளிட்ட 12 இடங்களில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழாவில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த கரூர் சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.மாவட்ட ஆட்சித் தலைவர்

தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி இளங்கோ, கிருஷணாயபுரம் சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர், துணை மேயர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

