Skip to content

கரூர் பாலசுப்ரமணிய கோவில் நில பிரச்னை- 500க்கும் மேற்பட்டோர் தர்ணா

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து

நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 200 க்கும் மேற்ப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கண்ணம்மாள் என்பவரின் வீடு 62 கடைகள், ஒரு செல்போன் டவர் ஆகியவற்றை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிட திட்டமிட்டுள்ள

சூழ்நிலையில் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலை துறை அலுவலகம் அமைந்துள்ள வெண்ணமலை முருகன் கோயில் முன்பு காத்திருப்பு போராட்டமும் தர்ணா போராட்டமும் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் என அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து பேசி வரும் நிலையில், மாற்றுக் கட்சியினர் சார்ந்தவர் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, இரு தரப்பினரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!