தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை இலங்கை கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் பைபர் போட்டு மீனவர்கள் ஆகிய மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் அதன் பேரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம் சேது பாசத்திரம் ஆகிய பகுதியில் 100க்கு மேற்பட்ட விசைப் படகுகளும் மேலும் அதிராம்பட்டினம் பகுதியிலிருந்து கட்டுமாவடி கடல் பகுதி வரைக்கும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பைபர் போட்டு படகுகளும் அதில் மீன்பிடிக்க செல்லும் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் சென்ற பதினைந்தாம் தேதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இது குறித்து மீனவர் நல வாரிய மாநில துணைத்தலைவர் தாஜுதீன் கூறுகையில் மழைக்காலங்களில் கனமழை புயல் போன்றவையில் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலங்களில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருப்பதால் மீனவ குடும்பங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றன .அரசு மழைக்காலம் நிவாரணம் நிதி மீனவர்களுக்கு வழங்கி வருகிறது. அது போதுமானது அல்ல ஆதலால் மீனவர் நலன் கருதி மழைக்கால நிதியை உயர்த்தி பத்தாயிரம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

