ஒன்றிய அரசு கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட் டங்களையும் முடக்கி வஞ்சித் துள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது :
மெட்ரோ திட்டத் திற்கு ஒப்புதல் அளிக்க மக்கள்தொகை 20 லட்சம் வரை தேவை என்றும் கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனு மதி கொடுக்க முடியாது என்று ஒன்றிய அரசு திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பி யிருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் ஆக்ரா. போபால், தானே போன்ற நகரங்களில் மக்கள்தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக இருந்தும் கூட அவை பாஜக ஆளும் மாநிலம் என்கிற ஒரே காரணத்தால் மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கு முழு மையான அனுமதி தரப்பட் டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு விடுத்த வேண்டுகோளை பல மாதங்கள் கிடப்பில் போட்டு இப்போது இந்த இரண்டு பெரு நகரங்களுக்கு மெட்ரோ ரயில் அனும தியை மறுத்து இருப்பது தமிழ் நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சிக்கும் செய லாகும். “”””கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங் களை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது பாஜ கவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங் கும் போக்கு”” இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடுமையாக கண்டிப்பதுடன் (21.11.2025)வெள்ளிக்கிழமை மதுரையில் திமுக கூட்டணி கட்சிகள் ஒன்றிய அரசை கண்டித்து நடத்தும் ஆர்ப் பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கு கொள்ளும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

