Skip to content

சிக்காத சிறுத்தை- 8வது முறையாக கூண்டு மாற்றி வைத்த வனத்துறை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் மீண்டும் சிறுத்தை பிடிக்க எட்டாவது முறையாக கூண்டு மாற்றி வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர். பொள்ளாச்சி-நவ-25
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாறைப்பதி பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் சிறுத்தை ஒன்று தனியார் தோட்டத்து சாலையில் இருக்கும் மூன்று கன்று குட்டிகள் மற்றும் வளர்ப்பு ஆடுகளை அடித்துக் கொன்றது.

இதை அடுத்து விவசாயிகள் ஆனைமலை புலிகள் காப்பகம் துணைக்கள இயக்குனர் தேவேந்திர குமார் மீனா இடம் சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வைத்து மனு அளித்தனர் வனத்துறை உயர் அதிகாரி உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி வனச்சரக ஞான பாலமுருகன் தலைமையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் மூன்று கூண்டுகள் வைக்கப்பட்டு வனத்துறையினர் கேமரா மற்றும் ஊராட்சி மன்ற கேமரா வைக்கப்பட்டு கண்காணித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்மன் கோவில் அருகில் உள்ள தனியார் தோட்டத்தில் சிறுத்தை கூண்டில் சிக்கியது. உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் அடர் வனப்பகுதியில் சிறுத்தை விடப்பட்டது இந்நிலையில் திடீரென மீண்டும் ஒரு சிறுத்தை நடமாட்டம் உள்ளது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது மூன்று கூண்டுகள் வைக்கப்பட்ட கண்காணித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆட்டுக்குட்டி சிறுத்தை அடித்துக் கொன்றது.

தற்போது எட்டாவது முறையாக கூண்டுகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு கணேஷ் என்பவர் தோட்டத்தில் சிறுத்தையின் கால் தடம் இருந்ததால் அங்கு கூண்டில் உயிருடன் கோழி வைத்து வனத்துறை கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் விரைவில் செலுத்தி பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர் வனத்துறையினருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!