Skip to content

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்… கரூரில் 207 இடங்களில் திமுக கொண்டாட்டம்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 207 இடங்களில் நலத்திட்ட உதவி, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 207 இடங்களில் திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்,இனிப்புகள் வழங்குதல், பொது மக்களுக்கு அன்னதானம், உள்ளிட்ட 207 இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கரூர் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் காலை அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

error: Content is protected !!