Skip to content

கரூர் சம்பவத்திற்கு விஜய் தான் காரணம்.. தகொஇ பேரவை மனு

கரூர் மாவட்டத்தில் வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 அன்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையினரின் (சி.பி.ஐ.) விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர பொது மக்கள்/ அமைப்புகள் ஆகியோர் மனுக்கள் ஏதும் அளிக்க விரும்பினால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மேற்படி குழுவினரிடம் நேரடியாக அளிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருந்த நிலையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் இன்று மனு அளிக்க உள்ளனர் அதில் கூட்ட நெரிசல் முக்கிய காரணம் காவல்துறை, நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாத விஜய் மற்றும் அவர்களது பொறுப்பாளர்கள் மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று மனு அளிக்க உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்டச் செயலாளர் அருள் குமார் மனு அளிக்க வந்திருந்தார்.

மனுவில், கடந்த 27.09.2025-ந் தேதியில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி குழந்தைகள் பெண்கள் உட்பட 41 பேர் மரணம் அடைந்து, பலர் மருத்துமனையில் சிகிச்சை பெற்றனர். இதற்கு முக்கிய காரணமே காவல்துறை, நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்களையும், சட்டவிதிகளையும் மதிக்காத விஜய் மற்றும் அவர்களது கட்சி பொறுப்பாளர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகளே காரணமாகும். இது சம்மந்தமாக நான் கடந்த 01.10.2025ம் தேதி மேற்படி சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு புகார் கொடுத்துள்ளேன்.

ஆகவே, சமூகம் ஐயா அவர்கள் மேற்படி சம்பவத்திற்கு முழுக்காரணமே விஜயும் அவர்களது கட்சி பொறுப்பாளர்களே ஆகும். எனவே மேற்படி விஜயின் மீதும் அவர்களது கட்சி பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!