Skip to content

ரூ.1,020 கோடி ஊழல்- மீண்டும் டிஜிபிக்கு ED கடிதம்

ரூ.1,020 கோடி ஊழல் என நகராட்சி நிர்வாகத்துறை மீது அமலாக்கத் துறையினர் டிஜபிக்கு கடிதம்…

நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி எனும் பெயரில் கே.என்.நேரு உதவியாளர்கள் 7.5% முதல் 10% வரை கமிசன் பெற்றுள்ளனர்.

கழிவறைகள் கட்டியது, தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததில் லஞ்சம் கைமாறியுள்ளது. நபார்டு நிதி மூலம் நடைபெற்ற நகராட்சி நிர்வாக பணிகளுக்கும் லஞ்சப்பணம் கைமாறியுள்ளது.

கிராம சாலைகள், ஏரிகள், நீர் நிலைகள் தொடர்பான திட்ட ஒப்பந்தத்திலும், தூய்மை பணியாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்திலும் லஞ்சம் கைமாறியுள்ளது.

ஒப்பந்தங்களை இறுதி செய்து வழங்கியது முதல் ஒப்பந்தத்திற்கான நிதியை விடுவிப்பது வரை நகராட்சி நிர்வாகத்துறையின் ஒவ்வொரு திட்ட ஒப்பந்தத்திலும் 20 முதல் 25 சதவீதம் வரை லஞ்சப்பணம் கைமாறியுள்ளது.

அமலாக்கத்துறை வைத்துள்ள ஆதாரங்கள் என்ன?…

ரூ.1,020 கோடி லஞ்சம் கைமாறியதற்கான ஆதாரங்கள் 258 பக்கங்களில் 300 புகைப்படங்கள் உள்ளது.

லஞ்சத்தை கணக்கீடு செய்த பட்டியல், பணம் கைமாறியது, ஹவாலா பரிவர்த்தனை உள்ளது.

லஞ்சம் கைமாறியதற்கான வாட்ஸ்ஆப் சாட் ஸ்க்ரீன் ஷாட்கள் உள்ளது.

நாங்கள் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழ்நாடு போலீஸ் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் லஞ்சம் வசூலித்ததில் போலீசுக்கும் தொடர்பு என முடிவுக்கு வர நேரிடும்-தமிழ்நாடு டி.ஜி.பி-க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.

error: Content is protected !!