கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.
இன்று சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு விநாயகர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பா

ல், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து அருகம்புல் சாற்றப்பட்டு தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
பின்னர் தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

