Skip to content

தமிழ் திறனறி தேர்வு- தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேர் தேர்ச்சி

தமிழ்நாடு அரசு திறனறிதல் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த கரூர் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 பேருக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா, ஒரு கோடியே 60 லட்சத்துக்கும் மேல் ஊக்கத்தொகை பெற்று சாதனை.

தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் – 2025 தேர்வில் கரூர், வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள (பரணி பார்க் வித்யாலயா) தனியார் பள்ளியில் இருந்

து மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். இதில் 100 பேர் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பாராட்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ் மொழியில் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ரூ.36,000/- வீதம் பரிசுத்தொகை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்

தமிழ்மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வு – 2022ல் 46 பேர், 2023ல் 103 பேர், 2024ல் 86 பேர், 2025ல் 100 பேர் வெற்றி பெற்று மொத்தம் 335 மாணவர்கள் இதுவரை சாதனைப் படைத்துள்ளனர்.

தமிழ்மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வில் சாதனைப் படைத்த அனைத்து வெற்றியாளருக்கும், சாதனைக்கு உறுதுணையாக இருந்த முதல்வர் ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினர். தமிழ் பயிற்சியால் சாதனை படைத்த 100 வெற்றியாளர்களும் தமிழக அரசிடமிருந்து மொத்த ஊக்கத்தொகையாக ரூ.1 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

error: Content is protected !!