கரூரில் 813 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் 1588 மாணவ மாணவிகளுக்கும் வினா விடை புத்தகத்தை கரூர் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது;
இது மாணவர்களின் பள்ளிப் பயணத்தை எளிதாக்குவதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பெரிய உதவியாக உள்ளது, அரசு இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கரூரில் உள்ள 7 பள்ளிகளில் இன்று 813 மாணவ மாணவிகளுக்கு

விலையில்லா மிதிவண்டி மற்றும் 1588 மாணவ மாணவிகளுக்கு வினா விடை புத்தகம் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள புனித தொரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 386 மிதிவண்டிகள் மற்றும் வினா விடை புத்தகம் பத்தாம் வகுப்பு 337 மற்றும் 12 ஆம் வகுப்பு 401 புத்தகங்கள் மற்றும் பசுபதிபாளையம் சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டிகள் 78 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 93 புத்தகம் 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 67 புத்தகம், பசுபதிபாளையம் விவேகானந்தா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 41 மிதிவண்டிகள் பத்தாம் வகுப்பு 41 புத்தகம் 12ஆம் வகுப்பு 51 புத்தகம் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 123 மிதிவண்டிகள் பத்தாம் வகுப்பு என்பது பன்னிரண்டாம் வகுப்பு 128 புத்தகங்கள் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 93 மிதிவண்டிகள் பத்தாம் வகுப்பு 69 12ஆம் வகுப்பு 109 புத்தகங்கள் வாங்கல் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 41 மிதிவண்டிகள் பத்தாம் வகுப்பு 51 12 ஆம் வகுப்பு 53 புத்தகங்கள் வாங்கல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 51 மிதிவண்டிகள் பத்தாம் வகுப்பு 43 12 ஆம் வகுப்பு 67 புத்தகங்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

