Skip to content

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை-25 பேர் கைது

திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தஞ்சை ரோடு டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 56 )என்பவர்ரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்துள்ளனர். இதே போன்று அரியமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நேருஜி நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 42) அவரது மனைவி ஜலிலா (வயது 38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவரங்கத்தில் ராகவேந்திரா வளைவு அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஆசை தம்பி (வயது 67) ராஜ்குமார் (வயது 32)திருவரங்கம் மேற்கு வாசல் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த தெப்பக்குளம் பகுதி சேர்ந்த பிரவீன் குமார் ( வயது30),வினோத் குமார் (வயது 30) ஆகியோரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுதலை செய்தனர்.இதேபோன்று கோட்டை போலீசாரத்துக்கு உட்பட்ட

திருச்சி கோட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட இபி ரோடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சேர்ந்த வீரன் (வயது 42)என்பரைலாட்டரி சீட்டுவிற்பனை செய்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். இதே போன்று, இபி ரோடு மதுர மைதானம் அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பழனியம்மாள் (வயது 56), இபி ரோடு பகுதியை சேர்ந்தவயது 53 ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து ஜாமனில் விடுதலை செய்தனர்.இதேபோன்று இபி ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வடக்கு காட்டுரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ( 27), இபி ரோடு தேவநாதபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சந்திரசேகர் ( 41)ஆகிய இரண்டு பேரை கோட்டை போலீசார் கைது செய்துள்ளார்.
பாலக்கரை போலீஸ்சரகத்துக்கு உட்பட்ட சங்கிலாண்டபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த இளையராஜா (வயது 42) அந்தோணி பிரபு (வயது 25) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதில் இளையராஜா ரவுடி பட்டியலில் உள்ளார்.தில்லைநகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த பாபு (வயது 54), உறையூர் மெயின் ரோட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த கைலேஷ் குமார் (வயது 31) கணேஷ் (வயது 24) மற்றும் உறையூர் எம்ஜிஆர் சிலை அருகே முஸ்லிம் தெரு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த தினேஷ்குமார் (வயது 31) ராதாகிருஷ்ணன் (வயது 55) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் உறையூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சபரி (வயது 54) பெரியசாமி மனைவி நாகஜோதி (வயது 58 ) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.அரசு மருத்துவமனை போலீசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சுரேஷ்குமார் (வயது 40) பாலசுப்பிரமணியம் (வயது 55) ,சண்முகா நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சரவணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் சண்முக நகர் நாலாவது கிராஸ் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற சரவணன் (வயது 42 )என்பவரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுதலை செய்தனர்.

error: Content is protected !!