Skip to content

நமக்கு 1 ரூபாய்க்கு 29 பைசா.. BJP மாநிலங்களுக்கு 1 ரூபாய்க்கு 7 ரூபாய்.. VSB புள்ளி விபரம்

100 நாள் வேலை, கல்வி நிதியை ஒன்றிய அரசு நிதிப் பாகுபாடு செய்தாலும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திமுக அரசு என முன்னாள் அமைச்சர் பேட்டி.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற வெல்லும் தமிழ் பெண்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க திட்டத்தினை இன்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து கரூர் மாவட்டம், அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 19,644 குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000

பெறுவதற்க்கான வங்கிப் பற்று அட்டைகளை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் குடும்பத்தலைவிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், பயனாளிகள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி;

தமிழகத் தாய்மார்கள் முதல்வரை அண்ணனாக, தம்பியாகக் கருதி, இதை அண்ணனின் சீதனமாக பெற்று, மகிழ்ச்சியுடன் பாராட்டி, தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இத்திட்டத்தை வழங்கிய முதல்வருக்குத் தங்கள் வாழ்நாள் முழுக்க துணையாகவும், அரணாகவும் இருப்போம் என்று உறுதி தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 89,000க்கும் மேற்பட்ட தாய்மார்கள் இ

த்திட்டத்தால் பயனடைகின்றனர்.

வட இந்தியாவில் திட்டங்கள் தொடங்கும்போது இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, அடுத்தடுத்த மாதங்களில் குறைக்கப்படும் சூழல் நிலவுகிறது.

தமிழக முதல்வர் விடுபட்டவர்களையும் பார்த்துப் பார்த்து இணைத்து, அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்.

100 நாள் வேலைத்திட்டம், கல்வி, ஜல் ஜீவன் போன்ற திட்டங்களுக்கான நிதிகளை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது. நாம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு 29 பைசா மட்டுமே திருப்பித் தருகிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ₹1 வரிக்கு அதிகபட்சம் ₹7 வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

குறைந்த நிதி கிடைத்தாலும், மாநில அரசின் நிதியைக் கொண்டு முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு, மகளிர் நலனில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்றவை மகளிருடைய வாழ்வில் முன்னேற்றத்திற்காக முதல்வர் செயல்படுத்தி வரும் சிறப்புத் திட்டங்களாகும். ஒட்டுமொத்தத் தாய்மார்களும் முதல்வருக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம் என உறுதி அளித்துள்ளனர் என தெரிவித்தார்.

error: Content is protected !!