Skip to content

மாணவன் வன்கொடுமை- 4 மாணவர்கள் போக்சோவில் கைது

தஞ்சாவூர், மருத்துவக்கல்லுாரி சாலையில், அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக விடுதி செயலப்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு அருகிலுள்ள அரசு பள்ளியில் படித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விடுதியில் தங்கி படிக்கும் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவனை, +2 படிக்கும் இரண்டு மாணவர்கள், 10வது மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சேர்ந்து கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். மேலும் சிகரெட் குடிக்க வேண்டும் என்றும் துன்புறுத்தி உள்ளனர். இந்த மாணவர்களின் டார்ச்சர் அதிகரித்ததால் கடும் மன உளைச்சளுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட மாணவன், தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து மாணவனின் பெற்றோர், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டிடம் புகார் அளித்தனர். இதன் பேரில், மாணவனை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்திய 4 மாணவர்களும் விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவனால் அளிக்கப்பட்ட தகவலின் பேரில், குழந்தைகள் உதவி மைய அலுவலர் தியாகராஜன், நான்கு மாணவர்கள் மீது, தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், 4 மாணவர்களையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவங்கள் உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து 4 மாணவர்கள் மீதும் போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறார் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!