கரூர் அருகே மகிளிப்பட்டி கிராமத்தில், வனபகுதியிலிருந்து வந்த 100க்கு மேற்பட்ட குரங்குகள் ஊருக்குள் புகுந்து சேட்டைகள் செய்வதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லும் உணவு பைகளை பிடுங்கிக் கொண்டும். ஓட்டு வீடுகளை சேதப்படுத்தி உள்ளே சென்று உணவுப் பொருட்களை சூறையாடி வருவதால் பொதுமக்கள் வேதனை. வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மகிளிப்பட்டி, உடையான்தோட்டம், எலுமிச்சைபண்ணை, தொட்டியப்பட்டி, லாலாபேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன.
மகிளிப்பட்டி பகுதியில் 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆயி ரத்துக்கும் மேற்பட்ட, பொது மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 70க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடவூர் வனப்பகுதி, அய்யர்மலை பகுதிகளிலிருந்து வந்த, 100க்கும் மேற்பட்ட குரங்குகள் மளிளிப்பட்டி மற்றும் சுற்று வட்டார் பகுதியில், கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ளன.
பள்ளிக்குச் செல்லும் சிறுவர், சிறுமிகளிடம் பயத்தை காட்டி
ஆக்ரோசமாக உணவு பைகளை பிடுங்கி செல்கின்றன.
அந்த பகுதியில் உணவு பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்களிடம் இருந்தும், குரங்குகள் ஆக்ரோஷம் காட்டி பறித்துக்கொண்டு ஓடி விடுகிறது.
மேலும், ஓட்டு வீடுகள் கூரை வீடுகளில் பிரித்துக் கொண்டு உள்ளே சென்று அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சேதப்படுத்தியும், பாத்திரங்களை சேதப்படுத்தியும் வருகிறது. அந்த கிராமத்தில் உள்ள பெட்டி கடை, டீ கடைகளிலும் குரங்குகள் கைவரிசையை காட்டி, உணவு பொருட்களை தூக்கி செல்கிறது.
மேலும் தென்னை மரம், மா மரம், கொய்யா உள்ளிட்ட மரங்களில் காய்க்கும் பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து, மகிளிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வனத்துறை அதிகாரி களிடம் புகார் செய்துள்ளனர். ஆனால், வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து விட்டு குரங்குகளை பிடிக்க வேண்டும்
அவைகளை கூண்டுகள் வைத்து தான் பிடிக்கமுடியும். தங்களிடம் கூண்டுகள் இல்லை எனக்கூறி, அலட்சியமாக பதில் அளித்துவிட்டு சென்று விட்டனர்.
இதனால், மகிளிப்பட்டி பகு திகளை சேர்ந்த பொதுமக்கள், சிறுவர், சிறுமிகளை வீட்டுக்கு வெளியே அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, வனத்துறை அதிகாரிகள், சேட்டை செய்யும் குரங்கு களை பிடித்து, மீண்டும் கடவூர் மலைப்பகுதியில், கொண்டு போய் விட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

