திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விஜய் இதுவரை எதுவும் பேசவில்லை, திமுக கூட்டணி வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதற்கான அவரது முயற்சி வெற்றி பெறாத – விஜய் பாஜகவின் பி-டீம் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் கரூரில் பேட்டி.
கரூரில் உள்ள தனியார் விடுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் கலந்து கொண்டார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ;
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு ஜனவரி 28ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெறுகிறது சிறப்பு விருந்தின

ராக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் சமுதாய மக்கள் எவ்வாறு களப்பணி ஆற்ற வேண்டும் என்ற சூளுரை எடுக்க உள்ளோம்.
ஒன்றிய பாஜக அரசு எப்படியாவது திமுக அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைத்து புதிய கட்சிகளை உருவாக்க சொல்லி திமுக பலமாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மூன்றாவது, நான்காவது அணி உருவாக்கி திமுக கூட்டணி வாக்குகளை பிரிக்கலாம் என்று நினைத்து பாஜக சதி திட்டம் தீட்டி வருகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நடிகர் விஜய் இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஒரு அரசியல் கட்சித் தலைவர் அனைத்துக்கும் கருத்து சொல்ல வேண்டும், நடுநிலையான கருத்து சொல்ல வேண்டும். பாஜக தான் அவரை இயக்குகிறது. பாஜகவிடம் அதிமுக சரணடைந்தது போல,

இன்னொரு புறம் திமுக கூட்டணியின் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதற்காக விஜய் முயற்சி செய்து வருகிறார். அவரது முயற்சி வெற்றி பெறாது. விஜய் பாஜகவின் பி-டீம். திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்து மு க ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்பார்.
ஒவ்வொரு மாவட்ட பொதுக்கூட்டங்களிலும் தொகுதிகள் குறித்து பேசி வருகிறோம். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதி எங்கள் பட்டியலில் இருக்கிறது. திமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கும்போது, அரவக்குறிச்சி தொகுதியை கேட்போம். அண்ணா, கலைஞர் காலத்தில் கூட இஸ்லாமியர்களுக்கு அரவக்குறிச்சி தொகுதியை ஒதுக்கி இருக்கிறார்கள். நாங்கள் வாங்கும் இடத்தில் இருக்கிறோம், திமுக கொடுக்கும் இடத்தில் இருக்கிறது என தெரிவித்தார்.

