கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.
110 நபர்கள் காயமுற்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர் .
இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தற்காலிகமாக சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தமிழக வெற்றிக் கழக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் உடற்கூறு ஆய்வு செய்த அரசு மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் துயர சம்பவத்தில் காயமடைந்த இன்று 10 நபர்கள் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர் . காயம் அடைந்த நபர்கள் தொடர்ந்து 2வது முறையாக ஆஜராகி இருப்பதால் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. மேலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இருந்து பல்வேறு நபர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

