திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய கோரி கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமியிடம் திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது… ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். திருச்சி BHEL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி (WP 20302 of 2023, dated 05.12.2025) பணி நிரந்தரம் செய்ய வேண்டி கனரக தொழில்துறை அமைச்சர் திரு. எச்.டி. குமாரசாமி அவர்களை இன்று (20.12.25) புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.
BHEL நிர்வாகம், பெல் கூட்டுறவு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் மூலம் பணியமர்த்தப்பட்டு திருச்சி பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அச்சங்கம் நீண்ட கால கோரிக்கையாக வைத்து வருகிறது.
நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது (WP 20302 of 2023, dated 05.12.2025). இத்தீர்ப்பின் மூலம் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை திருச்சி பெல் நிர்வாகம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
மாண்புமிகு கனரக தொழில்துறை அமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி, இது தொடர்பாக பெல் நிறுவனத்திற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

