Skip to content

செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற நர்சிங் மாணவி… ரயில் மோதி பலி

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம் புதூரை சேர்ந்தவர் ஹரிதா (17). இவர் திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். நேற்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஹரிதா உடலில் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இருப்பு பாதை போலீசார் சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!