Skip to content

திமுகவின் டூல் – ஹிட்டாக தான் விஜய் செயல்படுகிறார்.. அர்ஜுன் சம்பத் விமர்சனம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீப ஒளி ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூரணச்சந்திரன்
ஆத்மா சாந்தியடைய வேண்டி பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பூர்ண சந்திரன் திருவுருவப்படத்திற்கு தீப ஒளி ஏற்றி அஞ்சலி செலுத்தினர் பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது
தமிழக அரசியல் வரலாற்றில் இந்திய எதிர்ப்பு போராட்டத்திற்காகவும்,
சுதந்திர போராட்டத்திற்காகவும் பலர் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். ஆனால் முதல்முறையாக இந்துக்கள்,முருக பக்தர்கள் தங்களது கோரிக்கைக்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது வேதனை அளிப்பதாக தெரிவித்த அர்ஜுன் சம்பத் த.வெ.க தலைவர் விஜய் கொங்கு மண்டலம் ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவிற்கும் த.வெ.க.விற்கு தான் போட்டி என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து இருக்கிறார் அது தோல்வியில் முடிந்திருக்கிறது.
கொங்கு மண்டலத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் த.வெ.க. டெப்பாசிட்டை இழக்கும்
கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை விஜயை பார்ப்பதற்கு வேண்டுமானால் கூட்டம் கூடலாம்
த.வெ.க. இன்னொரு மக்கள் நீதி மையமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
திமுக ஒரு தீய சக்தி என அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாமே திமுக எழுதிக் கொடுத்தது தான்
திமுகவின் டூல் -ஹிட் ஆகத்தான் விஜய் செயல்படுகிறார்.

திமுக ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு நடிகரை வைத்து ஒரு கட்சி ஆரம்பிக்கும்
அதிமுகவின் வெற்றியை சிதைப்பதற்காகவும், வாக்குகளை பிரிப்பதற்காக திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும் என்பதற்காக ஒரு ஸ்டேஜஜியை உருவாக்கி கிறிஸ்துவ அமைப்புகளுடன் இணைந்து விஜய் இன்னொரு மக்கள் நீதி மையமாக செயல்பட்டு வருகிறார்தேர்தலுக்குப் பிறகு அவர் திமுகவிற்கு சென்று விடுவார். இதற்கு ஒரு உதாரணம் அவருடைய ஜனநாயகம் திரைப்படத்தை திமுகவை சேர்ந்த நிறுவனம் தான் சேட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது. வெளியில் தான் விஜய் திமுகவை விமர்சிப்பதும் திமுக விஜய் விமர்சிப்பதும் ஆனால் உள்ளே அவர்களுக்குள் அண்- கோ உள்ளது. விஜயின் கபட நாடகத்தை த.வெ.க.வின் இரட்டை வேடத்தை கொங்கு பகுதியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்

error: Content is protected !!