Skip to content

தவறவிட்ட ரூ.15000 மதிப்பிலான வௌ்ளி கொலுசு-வாட்ஸ்அப் குழு மூலம் மீட்பு

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகரில் பள்ளிக்குச் செல்லும் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், தான் அணிந்திருந்த சுமார் ரூ.15,000 மதிப்பிலான வெள்ளி கால் கொலுசை எதிர்பாராதவிதமாக வழியில் தவறவிட்டுள்ளார். இதைக் கண்டெடுத்த அப்பகுதியைச் சேர்ந்த காஜா என்ற நபர், அதனை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணி ‘பாப்புலர் எக்ஸ்பிரஸ்’ குழு அட்மின் அபுதாகிர் இடம் வழங்கினார்.

சுமார் 15,000-க்கும் மேற்பட்ட நபர்களை கொண்டு இயங்கி வரும் ‘பாப்புலர் எக்ஸ்பிரஸ்’ குழு உடனடியாக இந்தத் தகவலைத் தனது அனைத்து வாட்ஸ்அப் தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்தார்.கொலுசைத் தவறவிட்ட மாணவியின் குடும்பத்தினருக்குத் தகவல் சென்றடைந்தது.

தகவல் அறிந்து வந்த மாணவியின் பெற்றோரிடம், முறையான உறுதிப்படுத்துதலுக்குப் பிறகு வெள்ளி கொலுசு பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. தொலைந்த பொருளைக் குறுகிய காலத்திற்குள் மீட்டெடுத்துக் கொடுத்த ‘பாப்புலர் எக்ஸ்பிரஸ்’ குழுவிற்கும், கொலுசை நேர்மையுடன் ஒப்படைத்த நபருக்கும் மாணவியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தொழில்நுட்பத்தைப் பயனுள்ள வழியில் கையாண்டால் சமூகத்தில் பெரிய மாற்றங்களைச் செய்ய முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்” எனப் பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!