Skip to content

பிள்ளையார் நோன்பு விழா.. 1Kg உப்பு.. ரூ.26 ஆயிரத்திற்கு ஏலம்

கரூரில் நடைபெற்ற 39-ஆம் ஆண்டு பிள்ளையார் நோன்பு விழாவில் 1 கிலோ உப்பு 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ருசிகர நிகழ்வு நடைபெற்றது.

கரூரில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழாவானது 39-ம் ஆண்டாக, கரூரில் உள்ள
தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் செம்மல் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார். இதையடுத்து விழாவில் கூடியிருந்த 200 பேருக்கும் ஏலம் எடுத்துக் கொடுக்க அனைவரும் நோன்பு களைந்தனர்.

தொடர்ந்து வழிபாட்டிற்காக பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்ட உப்பு, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு, குழந்தை சட்டை, ஸ்கூல் பேக், மணமாலை, குபேரன், விளக்கு, பிள்ளையார் சிலை உள்ளிட்ட 18 மங்கள பொருட்களை சமூக நிதித் திரட்டலுக்காக ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தினை செயலாளர், மேலை பழநியப்பன் நடத்தினார்.

இந்த ஏல நிகழ்ச்சியில் ருசிகரமாக 1 கிலோ உப்பு 26,000 ரூபாய்க்கும், மணமாலை 10,001 ரூபாய்க்கும், மஞ்சள் 7,501 ரூபாய்க்கும், நாட்டு சர்க்கரை 7,000 ரூபாய்க்கும், விநாயகர் சிலை

விக்ரகம் 9,000 ரூபாய்க்கும், குங்குமம் 4,000 ரூபாய்க்கும், ஆண் குழந்தை சட்டை 10,001, தேங்காய் 5001 ரூபாய்க்கும், ஸ்கூல் பேக் 10,000, பிளாஸ்டிக் வீடு 10,001 ரூபாய்க்கு என மொத்தம் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!