Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூரத்தில் ‘மணி ஹெயிஸ்ட்’ பாணி கொள்ளை: வங்கி ஊழியர்க ளைத் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து ரூ.50 லட்சம் அள்ளிய கும்பல்

குஜராத் மாநிலம் சூரத்தின் வரச்சா பகுதியில் பகல் நேரத்தில் நடந்த ஒரு பெரிய கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரச்சாவில் அமைந்துள்ள எஸ்பிஐ கிளைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த நான்கு கொள்ளையர்கள் சுமார் 50 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்து சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பதற்மான சூழலை உருவாக்கியது.

போலீசார் அளித்த தகவலின்படி, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் மதியம் ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்துள்ளனர். கொள்ளையர்கள், வங்கியில் இருந்த ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, அவர்களைப் பணயக்கைதிகளாகப் பிடித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கொள்ளையர்கள் வங்கியின் கரூவூலத்தில் இருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தனர். துப்பாக்கி முனையில் கொள்ளையை நடத்திய பின்னர், அந்த நான்கு நபர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும், உள்ளூர் காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது. தற்போது, அப்பகுதி முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டு, வங்கி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளைப் பெற்று கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார் நகரம் முழுவதும் சாலைத் தடுப்புகளை அமைத்து, கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். மணி ஹெயிஸ்ட் (Money Heist) வெப்சீரிஸில் வருவது போல பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து கொள்ளையடித்து சென்றுள்ளது அந்த கும்பல்.

error: Content is protected !!