Skip to content

கரூரில் 7 கோடியில் நூலகம்.. VSB தகவல்

வேலைவாய்ப்பு முகாமை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து வேலை வாய்ப்புக்கான ஆணையை வழங்கினார்.

கரூர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னாள் அமைச்சர், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி முகாம் தொடங்கி வைத்தார்.

இந்த முகாம் இன்று சனிக்கிழமை, காலை 8மணிமுதல் மாலை 3 மணிவரை கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது.

இம்முகாம் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப ஏற்பாடு செய்துள்ளது.

8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ (ITI) டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல், உள்ளிட்ட எந்த படிப்புகள் படித்திருந்தாலும், கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைகள் வழங்க நிறுவனங்கள் தயாராக உள்ளது.

இன்று நடைபெற்று வரும் முகாமில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சார்ந்த ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் 7 கோடியில் திருவள்ளூர் மைதானத்தில் நூலகம் அமைக்கப்படவுள்ளது என எம்எல்ஏ செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைகளை பெற்ற இளைஞர்களுக்கு ஆணையை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!