Skip to content

மது போதையில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு தர்ம அடி.. கைது

குளித்தலை அருகே கழுகூரில் மது போதையில் 7 வயது சிறுமையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பிடித்து போலீசார் வசம் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுவூர் ஊராட்சி மாகாளிப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் 23.

இவர் இன்று கழுகு எஸ். வலையப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் மது குடிக்க சென்றுள்ளார்.

மது குடித்துவிட்டு அதீத போதையில் வந்த அவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னுடன் பைக்கில் வருமாறு கூறி கடத்தி சென்றுள்ளார்.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணாமல் பெற்றோர்கள் சுமார் 2 மணி நேரமாக தேடி வந்துள்ளனர்.

இரண்டு மணி நேரத்திற்கு பின்பு சிறுமியை அதே இடத்தில் இறக்கி விட சரவணன் வந்துள்ளார்.

அப்போதான் சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அப்போது பொதுமக்கள் அவரை தர்ம அடி கொடுத்து தோகைமலை போலீசார் வசம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் தோகைமலை போலீசார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடையினால்தான் இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது, மேலும் அங்கு மது அருந்த ஒருவர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக வரும்போதும் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட சிறுமைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கூறி தோகைமலை மணப்பாறை சாலையில் குறுக்கே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த அங்கு வந்த குளித்தலை டிஎஸ்பி போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்பகுதியில் செயல்படும் டாஸ்மார்க் கடை அகற்ற பொது மக்களாகிய நீங்கள் புகார் மனு அளித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியதன் பேரிலும், சிறுமியை கடத்திச் சென்ற நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தோகை மலை பகுதிகளில் இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்துகள், கனிமவள கொள்ளைகள், தனியார் இடத்தினை அபகரித்தல் மற்றும் மது அருந்திவிட்டு குற்றச்சாட்டு ஈடுபடும் சமூகங்கள் நடைபெற்று வருகின்றன ஆனால் அதனை காவல்துறையினர், சிறப்பு தனி படை காவலர்கள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதனால் குற்றத்தை தடுக்க வேண்டிய காவல்துறையினரே குற்றத்திற்கு துணை போவதால் அப்பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!