Skip to content

வாலிபால் போட்டி…கரூரில் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் திமுக சார்பில் பள்ளி குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் வாலிபால் போட்டியை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசு 25 ஆயிரம் ரூபாயும், நான்காம் பரிசு 22,000 மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த வாலிபால் விளையாட்டு வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!