கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானை ஆட்சியர், எம்எல்ஏ, எம்பி, எஸ் பி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கரூர், தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்

ஜோதிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு, 14 வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அரசு கலைக் கல்லூரியில் தொடங்கிய மாரத்தான், தான்தோன்றி மலை முக்கிய சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று, மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து, மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போதையற்ற சமூகத்தை உருவாக்கவும் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
