Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை- ரூ.9.67 கோடியில் சர்வதேச ஹாக்கி மைதானம்.. துணை முதல்வர் திறந்து வைத்தார்

கோவையில் ரூபாய் 9.5 கோடியில் ஹாக்கி மைதானம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

கோவையில் ரூ9.5 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் மற்றும் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.

வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு வனப்படை நவீன மையமாகக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவை மாவட்டத்தில் சிறுமுகை பெத்தி குட்டையில் ரூபாய் 19.5 கோடியில் கட்டப்பட்டு உள்ள வனவிலங்குகள் இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவண காப்பகம், சேமிப்பகம் ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஆர்.எஸ் புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் ரூபாய் 9.5 கோடியில் கட்டப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

தொடர்ந்து, ரூபாய் 31.3/4 கோடியில் 12 புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, மேலும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ரூபாய் 9.5 கோடியில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு உள்ள செயற்கை புல்வெளி தளத்துடன் ஹாக்கி மைதானம், சித்தாப்புதூர் மாநகராட்சி பள்ளியில் புதிய வகுப்பறைகள், குப்பைகள் சேகரிப்பு மையம் உட்பட ரூபாய் 162.5 கோடியில் 107 முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விழாவில் 10 ஆயிரத்து 626 பயனாளிகளுக்கு ரூபாய் 136.5 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, துணைமேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட செயலாளர்கள் துரை செந்தமிழ்ச் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், திமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!