Skip to content

திருவையாறு தியாகராஜ சுவாமியின் ஆராதனை… நாளை துவக்கம்

தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா வரும் நாளை தொடங்குகிறது. நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாகப் பிரம்ம மஹோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், விழாவைத் தொடங்கிவைக்கிறார்.

அன்று இரவு சீர்காழி சிவசிதம்பரம், திரைப்பட பின்னணிப் பாடகி மஹதி, ஜெய ராஜ் கிருஷ்ணன் – ஜெயஸ்ரீ, திருப்பதி ஹரிபாபு குழுவினரின் பாடல், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து ஜன. 4ம் தேதி முதல் 6-ம் தேதி வரை பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் பாடல்

மற்றும் நாகசுரம், வயலின், சாக் ஸபோன், வீணை, மேண்டலின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணியளவில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு ஒரே

குரலில் பஞ்சரத்ன கீர்த் தனைகளைப் பாடி, தியாக ராஜ சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். முன்னதாக, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி, விழாப்

பந்தலை அடையும். அன்று மாலையும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னர், இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

error: Content is protected !!