பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் தர்காவில் சந்தன கூடு அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் செய்கு நசுருதின் வலியுல்லா தர்காவில் 538 ஆம் ஆண்டு கந்தூரி விழா சென்ற 21ஆம் தேதி கொடி ஊர்வலம் நகர்வலம் வந்து தர்கா அருகாமையில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அதிலிருந்து விழா நடந்து வந்தது .இன்று கந்தூரி விழாவை முன்னிட்டு ஜொலிக்கும் மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு தர்காவை சுற்றி வலம் வந்தது. பின்னர் தர்கா முன் நிறுத்தப்பட்டு தர்காவில் சந்தனம் பூசப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை தர்கா கமிட்டியாளர்கள் பதுருள் ஜமான். ஜலால். அஸ்கர் மற்றும் கந்தூரி விழா கமிட்டியாளர்கள் செய்தனர்

