கோவை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் இந்திரா நகர் தேவாலயம் அருகே உள்ள PNG நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் செந்தில் இவரது தாயார்
சரஸ்வதி (82)
இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று செந்தில் உள்ளிட்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது., தற்போது வீட்டில் பெயிண்டிங் வேலை நடைபெற்று வருவதால் பெயிண்டர்கள் சிலர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வீட்டின் கழிவறையில்
புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது
இதைக் கண்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள், பெயிண்டர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் கதவை திறந்து பார்த்தபோது உடல் எரிந்த நிலையில் மூதாட்டி இறந்து கிடந்துள்ளார்
சம்பவ இடத்திற்கு விரைந்த பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார் தற்போது
தடயவியல் நிபுணர்கள் இறப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் இறப்பிற்கு வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து மகாலிங்கபுரம் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
