Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கிரேன் மோதி கூலி தொழிலாளி சாவு

திருச்சி எடமலைப்பட்டி போதுஹெல்த் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (73 ) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காந்தி மார்க்கெட் நான்கு ரோடு பகுதியில் கணேசன் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் கணேசன் மீது மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!