முதுகலை பட்டதாரி இளம் பெண் திடீர் தற்கொலை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் எஸ்பிஐ காலனி முதலாவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். வழக்கறிஞர். இவரது மகள் சந்திரகலா (வயது 27 )எம்ஏ ஆர்க்கியாலஜி முடித்துள்ள இவர் வீட்டில் இருந்து வந்தார் இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் மேலும் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இதுகுறித்து அவரது தந்தை
நாகராஜ் கொடுத்த புகார் அடிப்படையில்
எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்து விளக்கேற்றும் போது சேலைகள் தீப்பிடித்து மூதாட்டி பலி
திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் விக்னேஷ் மந்திராலயா பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபாலன் இவரது மனைவி சாவித்திரி வயது 84 இவர் வீட்டில் குத்து விளக்கு ஏற்றும் போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்து உடல் கருகியது உறவினர்கள் அவரை மீட்டு அங்குள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது மகன் கணேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் மயங்கி விழுந்து சாவு
திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மயங்கி விழுந்து கிடந்தார் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் விசாரணையில் அவரது பெயர் தாயம்மா வயது 60 என்பது தெரியவந்துள்ளது ஊர் விவரம் எதுவும் தெரியவில்லை இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

