கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க சந்திரா என்ற வயதான பெண்மணி வசித்து வந்தார்.
இவருக்கு உறவினர்கள் இருந்தும்,முறையான கவனிப்பு இன்றி திக்கற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ளார்.
கடந்த நான்கு மாதங்களாக போதிய உணவு இல்லாமலும், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் எழுந்து நடக்கக் கூட முடியாத சூழலில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இந்தச் சோகமான நிலை குறித்து அப்பகுதி பொதுமக்கள் கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்

பாக்கியராஜ், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சந்திராவை மீட்ட பாக்கியராஜ், அவரை உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சொந்த உறவுகளே ஒருவரை கைவிட்ட நிலையில், மனிதாபிமான அடிப்படையில் ஓடி வந்து உதவிய சமூக ஆர்வலர் செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக சமூக ஆர்வலர் பாக்கியராஜ் என்பவர் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோரைத் தேடிச் சென்று உணவளிப்பது,அவர்களுக்கு முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து புத்தாடை அணிவிப்பது,மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்ப்பது. உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்து வருகிறார்.

