Skip to content

செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை-திருச்சி க்ரைம்

செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை- 2 பேர் கைது, இருசக்கர வாகனங்கள், பணம் பறிமுதல்

திருச்சி வயலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த உறையூர் பகுதியை சேர்ந்த அன்பரசன் (வயது 41, ) விஜய் ஆனந்த் ( 37 ) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், 2 செல்போன், ரூ.1000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பொங்கல் விளையாட்டு தகராறில் இரு தரப்பினர் மோதல்4 சிறுவர்கள் உட்பட 21 பேர் மீது வழக்கு

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது அங்கு சிலர் வந்தனர். அவர்கள் பொங்கல் பண்டிகையின் போது நடந்த விளையாட்டு போட்டியில் குழந்தைகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினை குறித்து கேட்டுள்ளனர். அப்போது அந்த பெண்ணின் தரப்பினருக்கும், அவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.இதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இது குறித்து இருதரப்பினரும் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் 4 சிறுவர்கள் உள்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய டிரைவர் சாவு

திருச்சி சோமரசம் பேட்டை அல்லித்துறை புதுத்தெருவை சேர்ந்த ஒரு வின்சென்ட் வயது (49 ). டிரைவரான இவர் சம்பவத்தன்று தனது உறவினர் இறப்பிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த டூவீலர் திருட்டு

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் யுகவான் (வயது 54) இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது இது குறித்து அவர் உறையூர் போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!