கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு நான்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆஜராகி உள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்
வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தங்கி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள், உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், காயம் அடைந்த நபர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று கரூர் தான்தோன்றிமலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சம்பவத்தன்று தனியார் ஆம்புலன்ஸ் ஒட்டிய ஓட்டுநர்கள் நான்கு பேர் இன்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
குறிப்பாக சம்பவத்தன்று வேலுச்சாமிபுரம் பகுதிக்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் ஏற்கனவே விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களிடம் விசாரணையை தொடங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள்.

