Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செல்போன் திருட்டு.. மார்கெட் தொழிலாளி மாயம்- திருச்சி க்ரைம்

காந்தி மார்கெட் வாழைக்காய் மண்டி தொழிலாளி மாயம்

திருச்சி உறையூர் செவ்வந்தி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (75) இவர் காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்ற பாலசுப்பிரமணியன் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் செல்போன்கள் திருட்டு

திருச்சி உறையூர் சோழராஜபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் 32 இவர் மண்டலம் – 1 ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர் எஸ் எஸ்)பொறுப்பாளராக உள்ளார் இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ரூபாய் ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர் இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனங்கள் திருட்டு

அரசு ஆஸ்பத்திரியில் டூவீலர் திருட்டு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கீழக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் டேவிட் உபாகரசாமி . இவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார் அப்போது அவரது இரு சக்கர வாகனத்தை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு சென்றார் மீண்டும் மறுநாள் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்தது. இதேபோல்
திருச்சி மேல அம்பிகா புரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஷாஜகான் 40 இவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார் அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். சிகிச்சை பெற்று திரும்ப மறுநாள் வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் அங்கிருந்து திருடு போனது தெரிய வந்தது இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து டூவீலரை திருடிய மர்ம நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட போதை மாத்திரை விற்பனை நடப்பதாக உறையூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டு சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர் இதில் அவர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுலைமான் (29) என்பதும் போதை மாத்திரை விற்றதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து 20 போதை மாத்திரைகள் மூன்று ஊசிகள் மற்றும் ஒரு பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியமங்கலத்தில் கேட்பாரற்று இருந்த 8 டூவீலர்கள் பறிமுதல்..

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு திடீர் நகர் அருகே 5 இருசக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக போலீசார் அங்கு சென்று ஐந்து இருசக்கர வாகனங்களை கைப்பற்றி உள்ளனர். இதேபோல நேற்று முன்தினம் அரியமங்கலம் குப்பை கிடங்கு ஸ்டாலின் நகர் அருகே 3 டூவீலர்கள் நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசார் அந்த 3வாகனங்களையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட எட்டு இரு சக்கர வாகனங்களும் எதற்காக பயன்படுத்தப்பட்டது யார் ?அதன் உரிமையாளர்கள் ஏன் நம்பர் பிளேட் இன்று அப்பகுதியில் நிறுத்தப்பட்டது என பல்வேறு கோணங்களில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!