Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 15 பேர் காயம்…

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள நத்தமாடிப்பட்டி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு  போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 450 காளைகளும்,114 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடிக்க முயன்றனர். சில காளைகளை களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி வீரர்களை அச்சுறுத்தின.  போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், வீட்டு உபயோக பொருட்கள்  பரிசாக வழங்கப்பட்டது.

போட்டியில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், 2 பேர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!