அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2015-16ம் நிதியாண்டில் ரூ.35.42 கோடி வருவாய் என விஜய் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தார்.
நடிகர் விஜய் வீட்டில் 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்களோடு வருவாய் ஒப்பிடப்பட்டது.
புலி படத்திற்கு பெற்ற ரூ. 15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்த வருமான வரித்துறை.
வருமானத்தை மறைத்ததாக விஜய்க்கு 2022ல் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.
காலதாமதமாக தனக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்தநிலைியல் விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்து விஜய் தொடர்ந்திருந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

